இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
x
தினத்தந்தி 12 Dec 2024 9:04 AM IST (Updated: 13 Dec 2024 1:12 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Live Updates

  • 12 Dec 2024 10:26 AM IST

    ரஜினிகாந்த்திற்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ரஜினிகாந்த்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

  • 12 Dec 2024 9:24 AM IST

    புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மலை உச்சிக்கு தீப கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது.

    நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். பஞ்ச லோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரை ஏற்றப்படுகிறது. கிளி கோபுரம் அருகில் சிறப்பு பூஜையுடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  • 12 Dec 2024 9:08 AM IST

    விமான சேவை பாதிப்பு

    • சென்னை விமான நிலைய பகுதிகளில் தொடர் மழையால் விமான சேவை பாதிப்பு
    • விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கம்
    • சென்னையில் வந்து தரையிறங்கும் விமானங்கள் 20 நிமிடங்கள் வரை தாமதம்
    • சென்னையில் இருந்து புறப்படும் 15 உள்நாட்டு விமானங்கள் தாமதம்
    • சென்னையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு
    • இயந்திரக் கோளாறால் சென்னைக்கே திருப்பி விடப்பட்ட கொச்சி விமானம்

  • 12 Dec 2024 9:07 AM IST

     நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான காயங்களுடன் சிறுவனின் தந்தை, தங்கை உயிர் தப்பினர்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 4 பேரையும் மீட்டனர். நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் கவியழகன் உயிரிழந்தார்.சிறுவனின் தந்தை, தங்கை இருவரும் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கனமழை காரணமாக சிறுவன் கவியழகனின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது


Next Story