இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Jan 2025 4:22 AM
நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து நெல்லை ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 25 Jan 2025 4:19 AM
ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. நாளை அரிட்டாபட்டி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை (ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் நாளை அரிட்டாபட்டி செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Jan 2025 3:41 AM
தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை..? வெளியான முக்கிய தகவல்
இன்று (25.01.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மேற்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Jan 2025 3:34 AM
2-வது டி20: முன்னிலையை தக்க வைக்குமா இந்தியா..? இங்கிலாந்துடன் இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.