இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-03-2025
x
தினத்தந்தி 2 March 2025 3:39 AM (Updated: 2 March 2025 2:34 PM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் சில வரிகளில் இங்கே பார்க்கலாம்


Live Updates

  • 2 March 2025 2:27 PM

    கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

  • 2 March 2025 1:47 PM

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மதுராந்தகத்தில் விபத்தில் சிக்கி சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், காரில் பயணித்த குழந்தை மற்றும் அதன் பெற்றோர் உயிர் தப்பினர்.

  • 2 March 2025 1:09 PM

    மராட்டியத்தில் மத்திய மந்திரியின் மகளிடம் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

  • 2 March 2025 12:55 PM

    உத்தர பிரதேச மகா கும்பமேளாவில் குடும்பத்தில் இருந்து பிரிந்த 50 ஆயிரம் பக்தர்கள் அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நிகழ்வு நடந்துள்ளது.

  • 2 March 2025 12:50 PM

    நாமக்கல்: காவேரி ஆர்.எஸ். ரெயில்வே ஜங்ஷன் அருகே ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டு உள்ளது. தப்பியோடிய கொள்ளையன் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • 2 March 2025 12:48 PM

    நியூசிலாந்து அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

  • 2 March 2025 12:07 PM

    குஜராத்தின் தஹோத்தில் 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் கண்காணிப்பு சாதனம், கவச உபகரணம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இந்த என்ஜின் உருவாகி வருகிறது.

    இதனால் இந்திய ரெயில்வேக்கு இன்னும் ஒரு மாதத்தில் அதி நவீன, சக்தி வாய்ந்த என்ஜின் கிடைக்க உள்ளது. இது 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் டன் எடை கொண்ட சரக்கு ரெயிலை இழுத்து செல்லும் திறன் கொண்டிருக்கும். அதனுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆற்றலும் கொண்டு இருக்கும்.

  • 2 March 2025 11:50 AM

    ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந்தேதியில் இருந்து ஒரு வாரத்திற்குள் 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

  • 2 March 2025 10:32 AM

    பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, அதிகம் நகைகளை அணிந்து கொண்டு சென்றால், பார்ப்பவர்களுக்கு திருடனும் என்றுதான் தோன்றும், எல்லா இடத்திற்குமே போலீசார் பின் தொடர்ந்து வர முடியாது. பாலியல் தாக்குதலில் இருந்து நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.


Next Story