மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
x

மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இதனிடையே, விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

'மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!' என தெரிவித்துள்ளார்.


Next Story