திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது: வன அலுவலர் ரேவதி ரமணன்


திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது: வன அலுவலர் ரேவதி ரமணன்
x
தினத்தந்தி 18 Nov 2024 6:21 PM IST (Updated: 18 Nov 2024 8:05 PM IST)
t-max-icont-min-icon

பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது; தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை என வன அலுவலர் கூறினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு பக்தர் சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென யானை, யானைப் பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவிலுக்கு வந்திருந்த சிசுபாலன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து கோவில் யானையை கோவில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. சிசுபாலன், பாகன் உதயகுமாரின் உறவினர் என்பதும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் யானைக்கு பழம் கொடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இந்த உயிரிழப்பு சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 45 நிமிடம் கோவில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள் பின்னர் கோவில் திறக்கப்பட்டது. இதனிடையே, கோவிலுக்கு வந்த வன அலுவர் ரேவதி ரமணன், சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை அமைதியானது. பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது; தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை.2 பேரை தெய்வானை தாக்கியது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.


Next Story