மேலும் 6 இடங்களில் 'தோழி' மகளிர் விடுதி: வெளியான முக்கிய தகவல்


மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி: வெளியான முக்கிய தகவல்
x

கோப்புப்படம்

மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

சென்னை,

சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி மகளிர் விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் புதிதாக மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது. இதில் 950 பேர் தங்கும் வகையில் 2 விடுதிகள் சென்னையிலும், 4 விடுதிகள் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story