தூத்துக்குடி: பொங்கல் விழாவின்போது சாகசம் - கல்லூரி மாணவர்களின் பைக்குகள் பறிமுதல்
சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சுப்பையாபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்காக கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இதையடுத்து மாணவர்கள் தங்களது விலையுயர்ந்த பைக்குகளில் கல்லூரி வாசல் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அந்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 14 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story