திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.4.71 கோடி வசூல்


திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.4.71 கோடி வசூல்
x

திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.71 கோடி உண்டியல் வருவாய் வசூலாகியுள்ளது.

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் சேர்ந்த காணிக்கை பணத்தை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. இதன்படி 4 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரத்து 172 ரூபாய் உண்டியல் வருவாய் வசூலாகியுள்ளது.

மேலும் 1,603 கிராம் தங்க பொருட்களும், 52,230 கிராம் வெள்ளியும், 1 லட்சத்து 19 ஆயிரம் கிராம் பித்தளையும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது. அதே போல், 1,117 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story