'தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது' - அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 16 Oct 2024 6:28 AM IST (Updated: 16 Oct 2024 11:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை,

பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மின்சாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள மின்சார வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகமான மழை இருந்தாலும் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. மழைக் காலங்களில், உயிர்சேதம் ஏற்படாத வகையில் மின்சார விநியோகம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இதுவரை மழை பெய்த இடங்களில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மின்னகத்திற்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரியப்படுத்தினால் மின்சார வாரியம் தக்க நடவடிக்கை எடுக்கும்."

இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



Next Story