தேனி: காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


தேனி: காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x

ஆந்திராவிலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்புக் காவல்துறையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(21.12.2024) பிற்பகல் 3 மணி அளவில் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின் போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த பிரதீபன் (24), சந்திரன் (50), சசிகுமார் (30) ஆகிய மூவரையும் கைது செய்ததோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்த போதை தடுப்பு சிறப்புக் காவல் படையினர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 'மூவரும் ஆந்திர மாநிலம் சிலுக்கனூர் பேட்டையில் உள்ளவரிடம் 21 கிலோ கஞ்சாவை வாங்கி ஆந்திராவிலிருந்து பேருந்து மற்றும் ரெயில் மூலமாகத் திருச்சி வரை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் 3பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story