மழைநீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்: எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி பதில்


சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் , சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் உதயநிதி நிவாரண உதவிகளை வழங்கினார்.சென்னையில் கனமழையிலும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்தார்.

தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ,

சென்னையில் மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான். என தெரிவித்தார்.


Next Story