தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்


தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்
x

கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த ரமணி (வயது 26) நேற்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ரமணியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்படி இன்று முதல் அமைச்சர் உத்தரவுப்படி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரமணியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.


Next Story