தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்


தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்
x

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை நீல வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வழியாகவும், கவுண்டர்கள் மூலமாகவும் டிக்கெட் பெற்று பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதுவரை கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story