தீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - ராமதாஸ் பேட்டி


தீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - ராமதாஸ் பேட்டி
x

கோப்புப்படம் 

மதுவை இலக்கு வைத்து விற்பனை செய்வது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. எப்.எல்-2 என்ற பெயரில் தமிழக அரசு வழங்கும் உரிமத்தை எடுத்துக் கொண்டால், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் மனமகிழ் மன்றங்களை திறந்து மதுவை விற்பனை செய்யலாம் என்ற நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.467 கோடியே 69 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.625 கோடிக்கு மது வணிகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. மதுவை இலக்கு வைத்து விற்பனை செய்வது வெட்கக்கேடானது. எனவே தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முன்னும், பின்னும் ஒரு நாள் என 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மாநிலம் முழுவதும் 1,500 மனமகிழ் மன்றங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story