ஒலி மாசுவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை


ஒலி மாசுவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2025 4:25 AM (Updated: 30 Jan 2025 5:06 AM)
t-max-icont-min-icon

அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள், ஆர்டிஓ அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு இருப்பதாக புகார் எழுந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விவரம்:-

* குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் (ஒலி எழுப்பான்) பயன்படுத்தக்கூடாது.

*அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

*இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக்கூடாது.

*தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.

* மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம்.

* ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story