வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்காக 06.01.2025 முதல் 17.01.2025 வரை வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு மொத்தம் 23.586 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story