பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு- தமிழக அரசு


பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு- தமிழக அரசு
x

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து இடது பிரதான கால்வாயின் (புதிய ஆயக்கட்டு) புன்செய் பாசன நிலங்களுக்கு 13.01.2025 முதல் 03.05.2025 வரை 110 நாட்களுக்கு, வினாடிக்கு 70 கன அடி என மொத்தம் 665.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), முறைப் பாசனம் மூலம், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 9600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story