விருகம்பாக்கம் கால்வாயில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


விருகம்பாக்கம் கால்வாயில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இந்த நிலையில் , சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் .அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பாதிப்பு விவரங்களையும் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.


Next Story