பேருந்தில் இருந்து விழுந்த மாணவி - டிரைவர், கண்டக்டர் பணி நீக்கம்


பேருந்தில் இருந்து விழுந்த மாணவி - டிரைவர், கண்டக்டர் பணி நீக்கம்
x

பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடலூர்

கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த கல்லூரி மாணவி படு காயமடைந்தார். பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் கீழே விழுந்து விட்டதாக மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையிலி பேருந்தை அலட்சியமாக ஓட்டியதால், தற்காலிக ஊழியர்களான டிரைவர் ரகோத்தமன் மற்றும் கண்டக்டர் ஜெயபால் ஆகியோரை பணி நீக்கம் செய்வதாக கடலூர் அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.


Next Story