தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி சிறப்பு ரெயில் இயக்கம்
வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது (ரெயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (15-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.