ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள்; தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தங்களது பஞ்சாயத்து யூனியன் பதவிக்காலம் வரும் டிசம்பர் வரை உள்ளதால், சிறப்பு அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பஞ்சாயத்து துறை முதன்மை செயலாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story