கூட்டணி கட்சியோடு அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம் - திருமாவளவன் பேட்டி


கூட்டணி கட்சியோடு அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம் - திருமாவளவன் பேட்டி
x

கூட்டணி கட்சியோடு அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம் என்று திருமாவளவன் கூறினார்.

கடலூர்,

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 12-ந்தேதி பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியில் உபாிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விளைநிலங்களும் தண்ணரீல் மூழ்கி வீணாகின. இருப்பினும் தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய நிவாரணம் இப்பகுதி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளாற்றில் 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றுவதற்கு ஏதுவாக அங்கு 5 இடங்களில் வடிநில பாதை அமைக்க வேண்டும். வெள்ளியங்கால் ஓடையை ஆழப்படுத்தி கரைகளை உயர்த்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

கொத்தட்டையில் திடீரென உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. கூட்டணி கட்சிகளை நல்லிணக்கமாக கையாள்கிறது. கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம். அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம். அது எந்த கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story