கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் பதவி உயர்வு பெற்றனர். அதையொட்டி, பணியிட மாற்றமும் நடைபெற்றது. 56 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அதன்விவரம் பின்வருமாறு:-
*ஜெயசந்திரன் - சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
*அன்பு - ஆவடி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனரான இவர், ஈரோடு சிறப்பு அதிரடி படை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*தீபக் சிவாச் - விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், அரியலூர் போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார்.
*ராஜாராம் - கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பார்.
*கிரண் ஸ்ருதி - ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
*அபிஷேக் குப்தா - திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சரவண குமார் - கோவை தெற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தெற்கு மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
*செல்வராஜ் - அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
* ஆசிஷ் ராவத் - தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார்.
*ஜெயக்குமார் - திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார்.
*சீனிவாசன் - தென்காசி மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
* செல்வ நாகரத்தினம் - சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்பார்.
*டோங்கரே பிரவீன் உமேஷ் - சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
*சுந்தரவதனம் - கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை 'கியூ' சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
*ஈஸ்வரன் - சென்னை சைபர் பிரிவு (3) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், திருச்சி நகர தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
*சசாங்க் சாய் - சென்னை கியூ பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பேற்பார்.
*சரோஜ்குமார் தாக்குர் - சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை தலைமையக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*விஜயகுமார் - சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
*மகேஷ்குமார் - சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
*மனோகர் - திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், சென்னை வடக்கு இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
*வருண் குமார் - திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*சந்தோஷ் கடிமானி - சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனரான இவர், பதவி உயர்வு பெற்று, நெல்லை நகர கமிஷனராக மாற்றப்பட்டார்.
*பண்டி காங்காதர் - சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
*சசிமோகன் - ஈரோடு சிறப்பு அதிரடி படை சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகிப்பார்.
*வந்திதா பாண்டே - புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பகேரியா கல்யாண் - தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றுவார்.
*அவிநாஷ்குமார் - சென்னை டி.ஜி.பி. அலுவலக நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், தொழில் நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
*பவானிஷ்வரி - டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஷ்மென்ட் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பாலகிருஷ்ணன் -கோவை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
*கார்த்திகேயன் - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக உள்ள இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் அமலாக்க பிரிவு ஐ.ஜி.யாக பதவியேற்பார்.
*ஜெயஸ்ரீ - சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஊர்காவல் படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ஏ.ஜி.பாபு - தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், சென்னை ரெயில்வே ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
*மயில்வாகனன் - அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக உள்ள இவர் ஈரோடு சிறப்பு காவல்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார், .
* ஜோஷி நிர்மல் குமார் - சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
*லட்சுமி - திருப்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஸ்மென்ட் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ராஜேந்திரன் - சென்னை ஆவடி கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ரூபேஷ்குமார் மீனா - நெல்லை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்கிறார்.
*சரவண சுந்தர் - கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, கோவை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பிரவேஷ் குமார் - சென்னை வடக்கு இணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
*கயல் விழி - சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட 56 பேர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.