சபரிமலை சீசன்: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் (06111) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ.20-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இருமார்க்கமாகவும் தலா 9 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.