'கவர்னருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து ஆர்.என்.ரவி சண்டை போடுகிறார்' - அமைச்சர் துரைமுருகன்
கவர்னருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து ஆர்.என்.ரவி சண்டை போடுகிறார் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து அவர் பேசியதாவது;-
"கவர்னர் தனக்குரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் சண்டையிடுவது போல், ஆட்சியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.
கவர்னர் ஒரு அரசியல்வாதியாக செயல்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story