பயணியிடம் இருந்து அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை 64 வன உயிரினங்களை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்தனர்.
அப்போது ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52,, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8, என மொத்தம் 64 வன உயினங்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story