ராணிப்பேட்டை: வாங்கிய ஒரு மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்த புதிய பைக்


ராணிப்பேட்டை: வாங்கிய ஒரு மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்த புதிய பைக்
x

புதிதாக வாங்கிய பைக் சுமார் ஒரு மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த திமிரி பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து நேற்று சூர்யா என்ற நபர் புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில், பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில் சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டார்ட் செய்ய முயன்றபோது அதில் இருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது.

பின்னர் சில நொடிகளில் பைக் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட சூர்யா, பைக்கை விட்டு விலகிச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வாலாஜா சாலை அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிதாக வாங்கிய பைக் தீப்பற்றி எரிந்ததது ஏன்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story