சென்னை விமான நிலையத்தில் கூரையில் இருந்து அருவி போல் கொட்டும் மழைநீர் - பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் கூரையில் இருந்து அருவி போல் மழைநீர் கொட்டுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒன்றாவது முனையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் மேற்கூரையில் இருந்து மின்விளக்குகள் வழியே அருவி போல் மழைநீர் கொட்டுகிறது. இதனால் அந்த வழியாக சென்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த இடத்தில் மழைநீர் முதல் முறையாக கூரை வழியே கொட்டுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்விளக்கு வழியாக மழைநீர் கொட்டுவதால் அந்த வழியாக பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், விமான நிலையத்தில் ஒரு சில இடங்களில் மழைநீர் ஒழுகுவதாகவும், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story