சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு


சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story