சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை


சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
x
தினத்தந்தி 28 Nov 2024 11:48 PM IST (Updated: 29 Nov 2024 1:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை,

வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடையாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலை பார்க்க முடியவில்லை.

குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 11 மணியளவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.


Next Story