சென்னையில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
சென்னையில் சிறுமியை திரைப்படம் பார்க்க அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்ற நபரின் வீட்டில், கணவரை இழந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த பெண் சுரேஷிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவருக்கு பண உதவி செய்வதாக உறுதியளித்த சுரேஷ், அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு புது செருக்கு வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு கூட்டிச் சென்ற சுரேஷ், படம் பார்த்தபோது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கத்தி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் சுரேஷை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story