ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது - அண்ணாமலை கண்டனம்


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது - அண்ணாமலை கண்டனம்
x

வங்காளதேச அரசைக் கண்டித்து பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

வங்கதேச நாட்டில், இந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்காளதேச அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அமைதியான முறையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ள நிலையில், திமுக அரசு மட்டும் அனுமதி வழங்க மறுத்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும், பாஜக மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்திருக்கிறது.

வங்காளதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது, ஜனநாயக உரிமை. இதனை முடக்க நினைக்கும் திமுகவின் போக்கு, மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். துயரில் வாடும் வங்காளதேச இந்துக்களுக்காக பாஜக தொடர்ந்து ஓங்கி குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story