மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - போலீசார் குவிப்பு


மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - போலீசார் குவிப்பு
x

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் மூன்று சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலம் மற்றும் வீடுகளை வழங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு இன்று அதிகாரிகள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் வருவதைக் கண்டித்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story