உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உதயநிதி ஸ்டாலின், நடிகை ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரித்த ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், படத்தை நிறைவு செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' படத்தை தனது கடைசி படம் என அறிவித்து விட்டார் எனவும், ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு, ஐகோர்ட்டில் 25 கோடி இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், காலதாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் மனுவை ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.