சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தண்டையார்பேட்டை: நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச். ரோடு , அன்னைசத்தியா நகர் , பட்டேல் நகர் , பரமேஷ்வரன் நகர் , அஜீஸ் நகர், நாவலர்குடியிருப்பு , துர்காதேவி நகர் , பேசின் ரோடு, பர்மா காலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திராகாந்தி நகர், சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பு, நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேசன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர் , கே.எச். ரோடு , மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணாநகர் , ஜெ.ஜெ. நகர் , சுண்ணாம்புகால்வாய் ,வ.உ.சி நகர், கருமாரியம்மன் நகர் , மாதாகோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதிநகர், பாரதிநகர் குடியிருப்பு, ரிக்சாகாலனி, நியூ சாஸ்திரி நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.