தமிழக அரசு அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு


தமிழக அரசு அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு
x

தமிழக அரசு 40 இடங்களில் அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு 40 இடங்களில் அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதியில் சுற்றுசூழல் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அங்கு மலையேற்றத்தை அனுமதிக்கும்போது, மனித நடமாட்டத்தால் விலங்குகளின் உணவு தேடல், இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது எனவும், உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் வீசக்கூடும் என்பதால் சுற்றுசூழல் மாசடையவும் வாய்ப்பு உள்ளது, விலங்குகள் காயம் அடையவும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், மலையேற்ற பயண திட்டத்தை கைவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story