உண்மை அறியாமல் உளறுபவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள்: அமைச்சர் மதிவேந்தன்
உண்மை அறியாமல் உளறுபவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
சென்னை,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் செயப்படுத்தப்படும் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களாம் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் நல்லி, தொழில் பொருளாதார நிலைகளில் மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறார்கள். இதனை பொறுக்க முடிவாத சிலர், நல்லாட்சிக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
தங்களின் சுய லாபத்திற்காக மறைமுக அரசியல் செய்பவர்கள், உண்மை அறியாமல் உளறுபவர்களை, தமிழக மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பது திண்ணம். இதற்கு நடந்து முடிந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைத் தந்து அவர்களை புறந்தள்ளியதே தக்க சாட்சியாகும். நமது கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த 2021 முதல் ஆகஸ்ட் 2024 வரையில் பட்டியல் இன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 7,000 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 3,211 மிழிப்புணர்வு முகாம்களும் நடப்பாண்டில் 2,218 விழிப்புணர்வு முகாம்கள், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில், பட்டியலின மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாள் தயங்காமல் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ல் தெரிவிக்கப்பட்டுள்ள உதவிகள் காலம் தாழ்த்தாமல் வழங்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு என தனி காவல்துறை தலைவர் நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணித்து மேற்பார்வை செய்ய தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் முதல்-அமைச்சரின் சமத்துவம் காண்போம் என்ற திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக எவ்வாறு தீர்வு காண வேண்டும்; அவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவிகளை உடனடியாக எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இப்ப பயிற்சியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சியை குறை கூறுவோர் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐமமும் இல்லை. மக்களின் தீர்ப்பை மதிக்காமல் மக்களாட்சியின் தந்துவந்தை உணராமலும் அண்ணமிட்ட தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் கேடு செய்வது என்பது நுணுக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டும் செயலுக்கு சமமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.