மக்கள் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்


மக்கள் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x

மக்கள் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பாய்ந்து ஓடியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும், மழை நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக. ஆட்சிக்காலம். இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்.

இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story