7-வது முறையாக ஆட்சி அமைப்பதே நமது இலக்கு: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


7-வது முறையாக ஆட்சி அமைப்பதே நமது இலக்கு:  தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2024 1:45 PM IST (Updated: 22 Dec 2024 1:56 PM IST)
t-max-icont-min-icon

2026 தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், "ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம்முடைய இலக்கு. 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும் . 2026-ல் வெற்றி நமதே. 2026 தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.


Next Story