வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு


வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2024 8:30 PM IST (Updated: 13 Dec 2024 8:31 PM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25-ம் ஆண்டு பாசனத்திற்கு நாளை(14.12.2024 )முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம் (ஒரு நாளைக்கு 10.37 மி.கன அடி வீதம்) தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story