சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு


சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
x

கோப்புப்படம் 

சாத்தையாறு அணையிலிருந்து 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாத்தையாறு அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் சாத்தையாறு அணையிலிருந்து இன்று முதல் 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களுக்கு 28.10.2024 முதல் விநாடிக்கு 25 கனஅடி வீதம் தொடர்ந்து 18 நாட்களுக்கு சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களின் கீழ் உள்ள 1,499.59 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story