ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து


ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
x
தினத்தந்தி 14 Dec 2024 8:21 PM IST (Updated: 14 Dec 2024 9:26 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி,

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. இந்த ரெயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து சீரமைப்பு பணி காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் மற்றும் உதகை - குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை நாளை (15.12.2024)முதல் 3 நாட்களுக்கு மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story