நெல்லை: ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு - 20-க்கும் மேற்பட்டோர் காயம்
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக வேளாங்கண்ணியில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே வந்த போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பஸ்சுக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story