நெல்லை அருகே ஆம்னி பஸ் டயர் வெடித்து விபத்து - 5 பயணிகள் படுகாயம்
நெல்லை அருகே ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை,
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென அதன் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்த நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 5 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story