"புரிதல் இல்லை" - விஜய்யின் அரசியல் குறித்து சரத்குமார் கருத்து


புரிதல் இல்லை - விஜய்யின் அரசியல் குறித்து சரத்குமார் கருத்து
x

விஜய்யை போல் தானும் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்ததாக சரத்குமார் தெரிவித்தார்.

சென்னை,

நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசியதாவது;

"நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. விஜய்யை போலவே நானும் சினிமாவில் உட்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்னேன். உழைப்பும் உறுதியும் இருந்தால் எதுவும் சாத்தியம்.

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் கவர்னர் பதவி குறித்து புரிதல் இல்லாமல் விஜய் பேசி உள்ளார். புள்ளி விவரங்களை தெரிந்துகொண்டு விஜய் பேச வேண்டும். அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார்? விஜய் வீட்டில் எல்லோரும் இந்தி பேசுகிறார்கள். விஜய் இந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என எப்படி சொல்ல முடியும்? யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story