நெல்லை: திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - மேலும் 2 பேர் கைது


நெல்லை: திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - மேலும் 2 பேர் கைது
x

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் மேலும் 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் திரையரங்கில் கடந்த நவம்பர் 16-ந்தேதி அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி முகமது யூசுப் மற்றும் முகமது புகாரி ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதன்படி இந்த வழக்கு தொடர்பாக சிராஜுதீன் மற்றும் பாஷா ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பாளையம் ஆமின்புரம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தென் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.


Next Story