நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு


நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா முன்னேற்பாடுகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

நாகை,

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் வரும் டிசம்பர் 2-ந்தேதி கந்தூரி விழா நடைபெற உள்ளது. இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, தர்கா ஆலோசனைக் குழுவினர் சமீபத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு இன்று வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர், சி.சி.டி.வி., மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு கோபுரங்கள் என கந்தூரி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story