தேர்தல் கமிஷனிடம் நாம் தமிழர் கட்சி புகார்


தேர்தல் கமிஷனிடம் நாம் தமிழர் கட்சி புகார்
x

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது சீமானுக்கு இடையூறு விளைவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் நாம் தமிழர் கட்சி புகார் அளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது சீமானுக்கு இடையூறு விளைவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் நாம் தமிழர் கட்சி புகார் அளித்துள்ளது.சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்காக தேர்தல் கமிஷனின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 12-ந் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பரப்புரை செய்ய தொகுதிக்கு சீமான் வரும்போது அவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் தலைவருக்கு, தேர்தலில் பரப்புரை செய்ய முடியாத வகையில் இடையூறு விளைவிப்போம் என்று கூறும் அவுக்கு தேர்தல் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மீது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story