என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர்தான்: அன்பில் மகேஷ்


என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர்தான்: அன்பில் மகேஷ்
x
தினத்தந்தி 11 Nov 2024 1:06 PM IST (Updated: 11 Nov 2024 4:42 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சி நிறைவான ஆட்சி என்று மக்கள் பாராட்டுகின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன்பின் மாணவிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

பின்னர் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:-

திமுக ஆட்சி நிறைவான ஆட்சி என்று மக்கள் பாராட்டுகின்றனர். கல்வித்துறைக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். எங்களை விட முதல்-அமைச்சர் அதிகம் தெரிந்து வைத்துள்ளார். பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை போல அவரை காண செல்லும் போது தயாராவோம்.

அப்படிபட்ட தலைமை ஆசிரியரிடம் (முதல்-அமைச்சர்) நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகதான் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அதைபோல பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகளும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு வருவாய் ஈட்டித் தரக்கூடிய துறை எங்கள் துறை அல்ல; கல்விக்கு செய்கின்ற முதலீடு என்பது நல்ல சமுதாயம் என்கிற வட்டியை பெற்று தரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story