மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்கள் ரத்து
சீரமைப்பு பணி இன்னும் முடிவடையாததால் மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
நீலகிரி,
ஊட்டி, குன்னூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மலைப்பாதை, ராணுவ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் விரைந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கல்லாறு - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை 5-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. நாளை மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story